தியாக பூமி
₹230.00
தியாக பூமி
கல்கி
முதற் பதிப்பு : டிசம்பர் 2022
பக்கங்கள் : 344
விலை : 260
வெளியீடு : சிவகுரு பதிப்பகம்
நூல் வடிவமைப்பு : சூர்யா கிராபிக்ஸ்
அச்சகம் : நொவினோ ஆப்செட்ஸ்
Description
நாவல் குறித்து
கல்கியின் எழுத்தை தேடிப் பிடித்து படிப்பதில் பித்துக்கொண்டவனாக ஆனேன். ‘தியாக பூமி’ என்னை அடிமை கொண்டது. கதையம்சத்தில் உள்ள சுவாரஸ்யம் மட்டுமல்ல; பாத்திரங்களும் வாக்கியங்களின் ஜாலங்களும் தூங்கிக் கொண்டிருக்கும் சமயங்களில் கூட மனசுக்குள் வட்டமடிக்கிற மாதிரி இருந்தன.
ஏழை சம்பு சாஸ்திரி தன்மகள் சாவித்திரிக்கு வரன் பார்த்து, அந்த மாப்பிள்ளைக்காக ஒரு பட்டு வேட்டி வாங்கி வைத்திருக்க, அவருடைய வீட்டோடு இருக்கும் ஒரு பையன் அதை பிரித்துத் தன் மார்பின் மீது போர்த்திக் கொண்டதும் சாவித்திரிக்குக் கோபம் வந்த காட்சி இன்னும் என் கண் முன்னே நிற்கிறது. ‘சீ, கொடுடா அதை! என்று அவள் கையிலிருந்து அந்தப் பட்டு வேட்டியை அவள் பறித்துக் கொள்கிற வேகம்! ஏழை சாவித்திரியாக இருந்தவரையில் உதா சீனப்படுத்திய கணவன் அவள் பணக்காரி உமாராணியாக உயர்ந்ததும் ‘நீ மிதித்த பூமியை நான் பூஜிக்க தயாராயிருக்கிறேன்’ என்று அவளிடம் கெஞ்ச, ‘நீங்கள் மிதித்த பூமியை நான் மிதிக்கக் கூட தயாராயில்லை!’ என்று அவள் திருப்பியடிக்கும் சீற்றமும் எப்படி அந்த கட்டங்களை மறக்க முடியும்?
-எழுத்தாளர் ரா. கி. ரங்கராஜன்
Reviews
There are no reviews yet.